மணமகளாக ஜொலிக்கும் நடிகை ஹன்சிகா… என்ன அழகு! எத்தனை அழகு… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஷ் இதோ….

By Begam

Published on:

நடிகை ஹன்சிகா மணமகள்கோலத்தில்  இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் முதன் முதலாக வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவர் ‘சின்ன குஷ்பு’ என்று தனது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இவர் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட், வேலாயுதம், மாப்பிள்ளை போன்ற படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது. ஒரு கட்டத்தில் குண்டாக இருந்த இவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து தற்பொழுது ஸ்லிம் லுக்கிற்கு  மாறினார்.

   

இதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் மகா. திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வெற்றியை தரவில்லை. இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் திருமணம் தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

நடிகை ஹன்ஷிகாவின் திருமணத்திற்க்காக ஜெய்ப்பூரில் உள்ள 480 ஆண்டு கால பழமையான அரண்மனை ஒன்று பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டு வருகிறது. நடிகை ஹன்சிகா சொஹைல் கத்துரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

நடிகை ஹன்சிகாவிற்கு இவர் ப்ரொபோஸ் செய்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகிய வைரலானது. இதை தொடர்ந்து தற்பொழுது திருமணத்திற்கான மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவை மணமகள் தோற்றத்தில் கண்ட ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….