‘எங்கம்மா என்னை என் அப்பா பக்கத்துல சேர விடவே இல்ல’… MR ராதா பற்றி அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்த ராதாரவி

By vinoth on மே 30, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன். பி யு சின்னப்பா, எம் ஆர் ராதா, பாலையா என சிறந்த நடிகர்களின் வரிசையில் பராசக்தி மூலமாக அதிர்வலையை உருவாக்கியவர் சிவாஜி கணேசன். அதன் பிறகு 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக வலம் வந்தார். ஆனால் அவருக்கு ஒரு முறை கூட நடிப்புக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படிப்பட்ட சிவாஜியே நடிப்பில் தன்னுடைய முன்னோடியாக, ஆதர்சமாக நினைத்தவர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. நாடக உலகில் சிவாஜி, எம் ஜி ஆருக்கெல்லாம் சீனியரான ராதா, 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.

   

அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது சிவாஜியோடு அவர் இணைந்து நடித்த ‘பாகப்பிரிவினை’ திரைப்படம்தான். அந்த படத்தில் சிங்கபூரான் என்ற வேடத்தில் கலக்கி இருப்பார் ராதா. ராதாவை நம் படத்தில் போட்டால் அவரே நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் என இரண்டையும் பார்த்துக்கொள்வார் என அவரை எல்லா படத்திலும் புக் பண்ண ஆரம்பித்தனர்.

   

இந்நிலையில் எம் ஆர் ராதா பற்றி பல அரிய தகவல்களை அவரின் மகனான ராதாரவி பகிர்ந்துள்ளார். அதில் “என் அப்பாவோடு என்னை எங்கம்மா சேரவே விடவில்லை. அவரோடு நான் சிறுவயதில் நடிக்கவே யில்லை. ஆனால் வளர்ந்த பின்னர் அவரோடு நாடகங்களில் நடித்தேன். ஆனால் படத்தில் நடிக்கவில்லை.

 

என் அப்பா ஆசை ஆசையாக ஒரு கேரவன் செய்தார். தமிழ் சினிமாவில் முதல் கேரவென் வேன் அவர்தான் வைத்திருந்தார். அதில் தனக்குப் பிடித்தார் போல பல அலங்காரங்களை செய்தார். ஆனால் கடைசியில் அதை பெரியாருக்குக் கொடுத்துவிட்டார். மருத்துவர் சொல்வதைக் கேட்கவே மாட்டார். அப்படி கேட்டிருந்தால் இன்னும் சில ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.