Connect with us

விஜயகாந்த் வேண்டாம் என்று சொன்ன AVM… வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்த R சுந்தர்ராஜன்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

CINEMA

விஜயகாந்த் வேண்டாம் என்று சொன்ன AVM… வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்த R சுந்தர்ராஜன்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

ஆர். சுந்தர்ராஜன், டைரக்டர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் 80 களில் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். இயக்குனர் பாக்யராஜும் இவரும் கல்லூரி தோழர்கள். பயணங்கள் முடிவதில்லை என்ற சில்வர் ஜூப்ளி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் சுந்தர்ராஜன்.

அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், குங்குமச்சிமிழ், ராஜாதி ராஜா போன்ற படங்களை இயக்கி தன்னை முன்னணி இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டார். அதுமட்டுமின்றி பல படங்களில் ஆர் சுந்தர்ராஜன் நடித்திருக்கிறார். அமைதிப்படை, சூர்யா வம்சம், தசாவதாரம், நட்புக்காக, ஜானகிராமன், லிங்கா என பல படங்களில் அப்பா, அண்ணன், தாத்தா கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

நான் பாடும் பாடல் என்ற ஹிட் படத்தைக் கொடுத்த அவரை அடுத்து ஏவிஎம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த படத்துக்கு அவருக்கு முன்தொகையாக 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். அவரும் சில நாட்களில் கதையை எழுதி வந்துள்ளார். அதில் இருந்த ஒரு கதாபாத்திரத்துக்கு விஜயகாந்த் நடித்தால் சரியாக இருக்கும் என ஆர் சுந்தர்ராஜன் கூறியுள்ளார். ஆனால் ஏவிஎம் நிறுவனமோ சிவகுமாரை பரிந்துரை செய்துள்ளது. அது சம்மந்தமாக கருத்து வேறுபாடு எழ அட்வான்ஸை திருப்பிக் கேட்டுள்ளனர்.

   

ஆனால் அவர் வாங்கிய அட்வன்ஸை வீடு வாங்க கொடுத்துவிட்டாராம். அப்படி என்றால் அந்தத் தொகையை எப்படி கொடுப்பது என்று தயக்கம் வந்தது. அப்போது அவர் எதேட்சையாக கதாசிரியர் தூயவனை சந்தித்துள்ளார். அவரிடம் நடந்த விவரத்தை சுந்தரராஜன் கூறியுள்ளார். ‘அவ்வளவு தானே என்று என்னுடன் வாருங்கள்’ என்றார். பஞ்சு அருணாச்சலம் வீட்டில் வைத்து கதை விவாதம் நடந்தது. வெள்ளைச்சாமி கேரக்டருக்கு விஜயகாந்தையே நடிக்க வைத்தார்கள். அதே போல சுந்தரராஜனுக்கும் 2 லட்சம் கொடுக்கப்பட்டது. தூயவனே தயாரிப்பாளர் ஆகியுள்ளார். அப்படி உருவான திரைப்படம்தான் வைதேகி காத்திருந்தாள். அந்த படமும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

 
Continue Reading
To Top