Connect with us

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் ஈர்த்த மலையாள நடிகை.. சைலென்ட்-ஆக பண்ண சம்பவம்..!!

CINEMA

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் ஈர்த்த மலையாள நடிகை.. சைலென்ட்-ஆக பண்ண சம்பவம்..!!

மலையாள நடிகை கனி குஸ்ருதி 2001 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். முதலில் சிறு சிறு கதாபாத்திரங்கள் குறும்படங்களில் நடித்தார். 2009 ஆம் ஆண்டு வெளியான கேரளா கஃபே படம் கனிக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அதன் பிறகு அவர் ஏராளமான படங்களில் நடித்தார். ஆனால் கனிக்கு புகழை தேடித்தந்தது பிரியாணி திரைப்படம்.

Kani Kusruti: Setting The Bar High With Acting And Politics Around Body & Representation | Feminism in India

சஜன்பாபு இயக்கத்தில் வெளியான பிரியாணி திரைப்படத்தில் இஸ்லாமிய மதத்தையும் அந்த மதத்தில் பெண்கள் விஷயத்தில் எவ்வாறு பிற்போக்குத்தனமாக இருக்கிறார்கள் என்பதை பற்றியும் பல கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. இந்தப் படத்தில் கனியின் நடிப்பு அருமையாக இருக்கும்.

   

Stardom is not a goal for me: Kani Kusruti of Girls Will Be Girls - Hindustan Times

 

இந்த படத்தில் கதீஜா கதாபாத்திரத்தில் நடித்த கனிக்கு கேரள மாநில விருது வழங்கப்பட்டது. பிசாசு, பர்மா போன்ற தமிழ் படங்களிலும் கனி நடித்துள்ளார். மேலும் மா என்கிற குறும்படத்தில் நடித்ததாலும் கனி புகழ் பெற்றார். கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்றது. அங்கு இந்தியா சார்பில் ஏழு படங்கள் திரையிடப்பட்டது.

Kani Kusruti interview: Malayali actor talks about Biriyaani Maharani and OK Computer

அதில் மலையாளத்தில் உருவான ஆல் வி இமெஜின் ஆன் லைட் என்ற படமும் திரையிடப்பட்டது. இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது.  பாயல் கபாடியா இயக்கிய இந்த படத்தில் கனி குசுதி ஹிருது ஹாரூன் ஆகியோர் நடித்தனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் கனி கையில் வைத்திருந்த தர்பூசணி வடவிலான கைப்பை கவனத்தை ஈர்த்தது. புகைப்பட கலைஞர்கள் அவரை நெருங்கும் போது அந்த கைப்பையை கனி தூக்கி காண்பித்தார்.

நடிகை கனி குஸ்ருதியின் 'தர்பூசணி' குறியீடும், பாலஸ்தீன ஆதரவும்! - கான் பட விழா 'சம்பவம்'! | Cannes Actor Kani Kusruti shows solidarity for Palestine with watermelon clutch ...

தர்பூசணி என்பது பாலஸ்தீன மக்களின் போராட்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. மேலும் ஒற்றுமையின் அடையாளமகவும் கருதப்படுகிறது. தர்பூசணி பாலஸ்தீன மக்களின் உணவு வகைகளின் முக்கியமான ஒன்றாகும். அப்படி இருக்க கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் தர்பூசணி வடிவிலான கைப்பையை கனி வைத்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகை கனி குஸ்ருதியின் 'தர்பூசணி' குறியீடும், பாலஸ்தீன ஆதரவும்! - கான் பட விழா 'சம்பவம்'! | Cannes Actor Kani Kusruti shows solidarity for Palestine with watermelon clutch ...

author avatar
Priya Ram
Continue Reading
To Top