ராமச்சந்திரா உன் அரசியல் சின்னத்த என் முகத்துல காட்டாத… சீரிய எம் ஆர் ராதா… கடைசியில் எடுக்கப்பட்ட முடிவு!

Spread the love

தமிழ் சினிமாவில் தனக்கு முன்னோடி இல்லாத நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். மேடை நாடகத்தில் முடி சூடா மன்னனாக விளங்கியவர். 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.

அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது சிவாஜியோடு அவர் இணைந்து நடித்த ‘பாகப்பிரிவினை’ திரைப்படம்தான். அந்த படத்தில் சிங்கபூரான் என்ற வேடத்தில் கலக்கி இருப்பார் ராதா. ராதாவை நம் படத்தில் போட்டால் அவரே நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் என இரண்டையும் பார்த்துக்கொள்வார் என அவரை எல்லா படத்திலும் புக் பண்ண ஆரம்பித்தனர்.

எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக உருவாகி வந்த காலத்தில் கூட அவர்களுக்காக பணிந்து போகாதவர் எம் ஆர் ராதா. இருவரும அவரை மரியாதையோடு “அண்ணே” என்றுதான் அழைப்பார்கள். அப்படி இருந்த நிலையில் ஒருநாள் எம் ஜி ஆரோடு எம் ஆர் ராதா முரண்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

தொழிலாளி என்ற படத்தில் ஹீரோவான எம் ஜி ஆர் “கூட்டுறவு பஸ் சர்வீஸ்தான் நமக்கு வெளிச்சம் தரும் நம்பிக்கை நட்சத்திரம்” என்ற வசனத்தைப் பேசவேண்டும். ஆனால் அதில் நம்பிக்கை நட்சத்திரம் என்பதற்கு பதிலாக திமுகவின் சின்னமான உதயசூரியன் என பேச அந்த ஷாட் முடியும் போது வில்லனான எம் ஆர் ராதா முகத்தில் முடிந்துள்ளது.

அதனால் கோபமான ராதா “ராமச்சந்திரா நீ உன் கட்சி சின்னத்த என் முகத்துல காட்டாத, பேப்பர்ல இருக்குற மாதிரி நம்பிக்கை நட்சத்திரம் என்றே பேசு” என சீரியுள்ளார். இதனால் குழப்பம் நிலவ, கடைசியில் ஷாட் எம் ஆர் ராதா முகத்தில் முடியாமல் சுவரில் இருக்கும் கடவுள் படத்தின் மேல் முடிவது போல மாற்றி எடுத்தார்களாம்.

vinoth

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

5 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

6 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

6 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

6 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

6 மணத்தியாலங்கள் ago