மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவி தேர்தல் களம் அனல் பறக்கிறது. அதிமுகவின் சிட்டிங் தொகுதிகளாக இருந்த இத்தொகுதிகளில், அப்போதைய எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெக வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளதால், ஆட்சியைத் தக்கவைக்க தவெகவும், செல்வாக்கை நிரூபிக்க திமுக மற்றும் அதிமுகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கனவே பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாராபுரத்தில் இன்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக நேற்று இரவு சென்னையிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரம் சென்று சேர்ந்துள்ளார்.
இன்று காலை 10.30 மணி முதல் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து அமராவதி சிலையிலிருந்து தொடங்கி பொள்ளாச்சி சாலை மற்றும் பெரிய கடை வீதி வழியாக நடந்து சென்று ரோடு ஷோவாக வாக்காளர்களைச் சந்திக்கவுள்ளார். தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் உடுமலை சாலை மல்லி ரிசார்ட் அருகே நடைபெறும் பிரம்மாண்ட திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
