CM விஜய் கதறும் நாள் விரைவில் வரும்… ஆர்.பி. உதயகுமார் ஆவேச பேட்டி… அரசியலில் பெரும் பரபரப்பு…!!

By Swetha on ஐப்பசி 2, 2026

Spread the love

அதிமுகவை விமர்சித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அதிமுகவை ஏன் தொட்டோம் என சி.எம். விஜய் கதறும் நாள் விரைவில் வரும்” என்று எச்சரித்த அவர், அரசியல் காற்று எப்போதும் ஒரே திசையில் வீசாது என்றும், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி அதற்கு சிறந்த அச்சாரமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார். அதிமுகவைப் பற்றி தவறாகப் பேசுவதை விஜய் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தற்காலிகப் புகழைக் கொண்டு அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது எனக் கூறிய அவர், “திடீர் விபத்தால் அதிகார ஆசைக்கு வந்த விஜய் அல்ல, அவரது அப்பன் அல்ல, தாத்தாவே வந்தாலும் கடைசி தொண்டன் இருக்கும் வரை அதிமுகவிடம் அவர்களின் பாச்சா பலிக்காது” என ஆவேசமாகச் சூளுரைத்தார். நூறாண்டுகள் கடந்தும் மக்கள் தொண்டாற்றும் வலிமை கொண்ட இயக்கம் அதிமுக மட்டுமே என்பதை விஜய் போன்ற அரசியல் புதுமுகங்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.