அடடே!..”படிப்புக்கு ஏது வயசு?!”…பேரன் வயசு பசங்களோட 10th Exam… 9,000 பேரில் இவர்தான் சீனியர்… நெஞ்சைத் தொடும் முதியவரின் வைராக்கியம்…!!

By Gayathri on ஐப்பசி 2, 2026

Spread the love

மேகாலயா மாநிலம் ரிபோய் மாவட்டத்தில் உள்ள தத்ராங் உம்கெம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஷடாப், வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 1989-ஆம் ஆண்டு தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டார். குடும்பப் பொறுப்புகளைச் சுமந்த போதிலும், என்றாவது ஒரு நாள் தனது கல்வியை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற தீவிரமான ஆசை மற்றும் தேடல் அவருக்குள் பல தசாப்தங்களாகவே இருந்து வந்தது.

அவரது கனவை நனவாக்கும் வகையில், கல்வியை பாதியிலேயே நிறுத்தியவர்களுக்காக மேகாலயா மாநில அரசு மீண்டும் கல்வி கற்கும் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வயது வரம்பு ஏதுமின்றி தொடக்கக் கல்வியை மீண்டும் கற்பதற்கான இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஷடாப், பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தனது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுவதற்காக முழு வீச்சில் தயாராகி வருகிறார்.

   

மேகாலயா பள்ளிக்கல்வி வாரியம் மற்றும் ‘எம்பவர்’ என்ற அமைப்பு ஆகியவை கூட்டாக இணைந்து செயல்படுத்தும் இந்த இரண்டாவது வாய்ப்புத் திட்டத்தில், நடப்பு ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் சுமார் 9,767 இடைநின்ற மாணவர்கள் தனித்தேர்வர்களாகப் பதிவு செய்துள்ளனர். மீண்டும் கல்வி கற்க வந்துள்ள இந்த ஆயிரக்கணக்கானவர்களில், மிக அதிக வயதான நபர் என்ற பெருமையை முதியவர் ஷடாப் பெற்றுள்ளார்.