Categories: சினிமா

உலகம் சுற்றும் வாலிபன் படம் நல்லா இருக்காது, ஓடவே ஓடாது – திட்டி எழுதிய பத்திரிக்கையாளரையே பாராட்ட வைத்த MGR-ன் செயல்!

Spread the love

தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.

சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் திமுக எனும் கட்சி அசுர வேகத்தில் வளர்ந்து வந்த நிலையில் அப்போது அதன் பிரதிநிதியாக தன்னை இணைத்துக் கொண்ட எம் ஜி ஆர், அந்த கட்சியின் பிரச்சாகராக சினிமாவில் தன்னை முன்னிறுத்தினார். கட்சியின் வளர்ச்சிக்கு எம் ஜி ஆரும்,  எம்ஜி ஆரின் பிரபலத்துக்கு திமுகவும், அதன் தொண்டர் படையும் உதவினர்.

ஆனால் திமுகவின் பொதுச்செயலாளர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் எம் ஜி ஆருக்கு சில பிணக்குகள் ஏற்படத் தொடங்கின. இதையடுத்து 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அது அவர் சினிமா வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற கேள்வி இருந்தது.

அப்போதுதான் அவர் அவர் இயக்கி தயாரித்து நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் ரிலீஸூக்குத் தயாரானது. ஆனால் அந்த பட ரிலீஸுக்கு அப்போதைய ஆளுங்கட்சியிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்துள்ளன. அதன் உச்சகட்டமாக படத்துக்கு போஸ்டர் கூட ஒட்ட முடியாத அளவுக்கு பிரச்சனகள் வந்துள்ளன. அதனால் சிங்கப்பூரில் இருந்து ஸ்டிக்கர்களை வரவழைத்துள்ளார் எம் ஜி ஆர்.

அதே போல ஊடகங்களிலும் அந்த படத்துக்கு எதிர்மறையான விமர்சனம்தான் இருந்தது. அப்போது பிரபலமாக இருந்த பத்திரிக்கையாளரான எம் ஜி வல்லபன் “இந்த படம் வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டும் என்றே உருவாக்கப்படுகிறது. அதனால் இந்த படம் ரசிகர்களுக்குப் பிடிக்க வாய்ப்பில்லை” என்று எழுதியிருந்தார். இதை நினைவில் வைத்திருந்த எம் ஜி ஆர் படம் ரிலீசானதும் அவருக்கு ப்ரிவியூ ஷோ போட்டுக் காட்டியுள்ளார்.

படத்தைப் பார்த்த எம் ஜி வல்லபன் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டாராம். படம் சிறப்பாக வந்திருப்பதாக எம் ஜி ஆரை பாராட்டியுள்ளார். மேலும் படம் குறித்த பாசிட்டிவ்வான விமர்சனத்தையே பத்திரிக்கையிலும் எழுதியுள்ளார்.

vinoth

Recent Posts

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

55 seconds ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

14 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

14 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

19 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

30 minutes ago

“அம்மா தான் என் தலைவி.. ஆனா ஓட்டு விஜய்க்கு!”… தவெக வேட்பாளருக்காகக் களமிறங்கிய ராமராஜன்… அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!!

தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…

34 minutes ago