தமிழ் சினிமாவின் முதல் சயின்ஸ் பிக்‌ஷன் படம் எது தெரியுமா..? அப்பவே மாஸ் காட்டிய மக்கள் திலகம்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த எம் ஜி ஆர் ஒரே வகையான படங்களில்தான் நடித்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மேல்  உண்டு. பொறுப்பான இளைஞன், தாயை தெய்வமாக வணங்கும் இளைஞன், தங்கையைக் கற்பழித்தவனையே அவனுக்கு திருமணம் செய்துவைக்க போராடும் இளைஞன், ஊர் பண்ணையாரை எதிர்த்து போராடும் இளைஞன், என அவர் நடித்த கதாபாத்திரங்களை ஒரு சில டெம்ப்ளேட்டுகளில் அடக்கிவிடலாம்.

ஆனால் எம் ஜி ஆர் பல வித்தியாசமான படங்களிலும் நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத தகவல். தமிழ் சினிமாவின் ஏன் இந்திய சினிமாவிலேயே முதல் சயின்ஸ் பிக்‌ஷன் படமே எம் ஜி ஆர் நடிப்பில் உருவானதுதான். 1963 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் மற்றும் பானுமதி நடிப்பில் உருவான கலையரசி திரைப்படம் ஸ்பேஸ்ஷிப் பற்றிய கதையாகும்.  இந்த படத்தில் ஒரு விண்வெளி தட்டில் வரும் ஏலியன் எம் ஜி ஆரின் காதலியான பானுமதியை தூக்கி சென்றுவிடும்.

   

எம் ஜி ஆர் போராடி தனது காதலியை அந்த ஏலியனிடம் இருந்து மீட்பார். ஏலியன் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்ட வித்தியாசமான உடைகளை வடிவமைத்திருப்பார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற விண்வெளி தட்டு சண்டைக் காட்சிகள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருக்கும்.

1963 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி ரிலிஸான இந்த படத்தை சரோடி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ காசிலிங்கம் இயக்கியிருந்தார். கே வி மகாதேவன் இசையமைத்திருந்தார். கெடுவாய்ப்பாக இந்த படம் தோல்விப் படமாக அமைந்துவிட்டது.

ஆனாலும் அந்த காலத்திலேயே ஒரு அறிவியல் புனைவு திரைப்படத்தை உருவாக்கிய படக்குழுவினரும், அதில் நடிக்க சம்மதித்த எம் ஜி ஆரும் பாராட்டுதலுக்குரியவர்களாவர். இந்த படம் இப்போதும் யுடியில் பார்க்கக் கிடைக்கிறது.