தெலுங்கு படம் செல்லுபடி ஆகலன்னு மலையாளத்தில் களமிறங்கிய அனுஷ்கா.. மீண்டும் தன் வேட்டையை ஆரம்பித்த அருந்ததி.!

By Ranjith Kumar

Updated on:

இந்திய சினிமாவில் எந்த நடிகைக்கும் இல்லாத அளவிற்கு தனி மார்க்கெட்டை பிடித்து வைத்திருப்பவர் தான் தனக்கென்று “அனுஷ்கா செட்டி”. இதுவரையில் நடிகைகளுக்கு இல்லாத அளவிற்கு மாபெரும் மார்க்கெட்டை தன் வசம் வைத்திருக்கிறார். இவர் தெலுகு, மலையாளம், ஹிந்தி, தமிழ், கன்னடம், போஜ்புரி போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து சினிமா துறையிலும் இவர் வேலை பார்த்துள்ளார். இவர் நடிக்காத படங்களே இல்லை. இவர் இதுவரை பல அவார்டுகளை குவித்துள்ளார். ஃபிலிம் பேர் அவார்ட், நேஷனல் அவார்ட், சிறந்த, நடிகை சிறந்த துணை நடிகை என்று பல விருதுகளை இவர் அல்லி குவித்துள்ளார்.

இவர் பெங்களூரை சேர்ந்த பெண்மணியாக இருந்தாலும் தமிழில் இவருக்கு மாபெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. 2005 ஆம் ஆண்டு முதல் முதலாக தெலுங்கு படமான “சூப்பர்” என்ற படம் மூலம் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனக்கென்று ஒரு மாபெரும் இடத்தை பிடித்து தன் நடிப்பு திறமையை வெளிக் கொண்டு வந்தார். அதன் பின்னதாக டான், ஒக்க மகுடு போன்ற பல தெலுங்கு படத்தில் நடித்த மாபெரும் நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னதாக முதல் முதலில் 2009 ஆம் ஆண்டு தான், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கொடி ராமகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் சோனு சூது உடன் இணைந்து நடித்து வெளிவந்து இந்தியா சினிமா துறையை வியக்கும் படி அமைந்த படம் தான் “அருந்ததி”.

   

இந்த ஒரு படம் மூலமாக, இந்தியா முழுவதும் இருக்கும் மாபெரும் சூப்பர் ஸ்டார்களே கலங்கி போகும் அளவிற்கு இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் மாபெரும் மாஸ் மற்றும் பிரம்மாண்டவசலை பெற்ற முதல் இந்திய திரைப்படம் இதுவே ஆகும். அதற்கு முழுக்க முழுக்க அனுஷ்கா அவர்களின் சிறந்த நடிப்பே காரணமாகும். அதன் பின்னதாக பல பிரமாண்ட படங்கள் ஆன பாகுபலி, பில்லா, லிங்கா, சிங்கம் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து முன்னாடி நடிகையாக நடித்து வளம் வந்து கொண்டிருந்தார். அதன் பின்னதாக ஜீரோ சைஸ், மிஸ் செட்டி மிஸ்டர் போலி செட்டி போன்றவற்றில் அனுஷ்கா அவர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்து ஒரு மிதமான வசூலை பெற்று,

அதன் பின்னதாக சில படங்கள் சரியாக இவர் அமையாமல், இந்திய சினிமாவில் சிறிது காலம் இடைவெளி விட்டிருந்தார். தற்போது இவர் நீண்ட நாள் பிறகு மலையாள இயக்குனரான “ரோஜின் தாமஸ்” அவர்கள் இயக்கத்தில் ஜெயசூர்யா அவர்களுடன் இணைந்து அனுஷ்கா செட்டி அவர்கள் “காத்தனர்” என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இவர் நீண்ட வருடங்களுக்கு தென்னிந்திய படங்களில் நடிப்பது இவர்களின் ரசிகர்களுக்கு மாபெரும் சர்ப்ரைஸ் ஆக அமைந்திருப்பதால், ரசிகர்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Jayasurya Jayan (@actor_jayasurya)

author avatar
Ranjith Kumar