மகேந்திரா நிறுவன ஓனருக்கு நன்றி கூறி கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெளியிட்ட பதிவு வைரல்..

By Ranjith Kumar

Published on:

இந்தியாவின் முதல் சிறுவயது (age-12) கிரான் மாஸ்டராக இருப்பவர்தான் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா. இவருடன் பிறந்த அக்காவான ஆர் வைஷாலி அவர்கள் சிறுவயதிலிருந்து இருவரும் செஸ் போட்டியில் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார்கள். அதில் அக்கா பல காம்பெடிஷனில் கலந்து கொண்டு பல சாதனைகளை படைத்துள்ளார். பிரக்ஞானந்தாவும் தற்போது சிறுவயதிலிருந்து செஸ்மேல் ஆர்வம் கொண்டு படிப்படியாக கற்றுக்கொண்டு தற்போது உலகில் சிறந்த செஸ் பிளேயராக பட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். சிறு வயதில் யாரும் செய்யாத சாதனையை இவர் செய்துள்ளார்.

இந்தியாவின் முதல் செஸ் பிளேயராக வளம் வந்த விஸ்வநாத் ஆனந்த் அவர்களின் ரெக்கார்டையே முறியடித்து தற்போது முன்னிலையில் இருக்கிறார். முதல் முதலாக இவர் வேர்ல்ட் யூத் செஸ் சாம்பியன் 2013ஆம் ஆண்டு விளையாடி 8 முறையான டைட்டில்களை வென்று தன் பெயரில் அடுக்கி வைத்துள்ளார். அதன் பின்னதாக 2015 ஆம் ஆண்டு FIDE மாஸ்டர் என்ற செஸ் சாம்பியனில் வென்று 10 டைட்டில்களை தன் பெயரில் தக்க வைத்துள்ளார். வேர்ல்ட் ஜூனியர் செஸ் சாம்பியன் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பொழுது அதிகப்படியான 8 point-ல் தனது எதிர் விளையாட்டு வீரரை தோற்கடித்த பெருமையும் இவருக்கே.

   

அதன் பின்னராக தான் மாபெரும் உலகப் போட்டியான (Urtijeu. Italy) இத்தாலியில் 2018 ஆம் ஆண்டு நடந்த கோல்டு செஸ் சாம்பியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 8 point-ல் எதிராளியை மடக்கி உலகின் ஐந்தாவதும், இந்தியாவில் இரண்டாவது மன ஜூனியர் சாம்பியன் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை வென்று உலக சாதனை படைத்தார். இவர் தனது 12 வயதிலேயே உலக சாதனையாளர் விஸ்வநாத ஆனந்த்  அவர்களை chess world cub ஆன ‘பாபினோ குரானோ’ என்ற செஸ் அரங்கில் வைத்து முதல் இடத்திலிருந்து ஆனந்த் அவர்களை இரண்டாவது இடத்திற்கு தள்ளி டைட்டில் வின்னராக இடத்தைப் பிடித்தார் பிரக்ஞானந்தா.

அதன்பின் தான் இவர் உலகம் முழுவதும் மிகப் பிரபலம் ஆனார். அதற்கடுத்ததாக உலகில் நடக்கும் வெவ்வேறு இடங்களில் உள்ள செஸ் விளையாட்டு அரங்கிற்கு சென்று பல சாதனைகளை தற்போது படைத்து வருகிறார். அதற்காக இவருக்கு பல பாராட்டுகளும் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறது. பல விருதுகளும் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றாக தான் தற்போது மகேந்திரா கம்பெனி ஓனர் ஆன “ஆனந்த் மகேந்திரா” அவர்கள் இவரின் திறமையை பார்த்து வியந்து,

பிரக்ஞானந்தா அவர்களுக்கு (XUV 400) CAR ஒன்றை பரிசளித்துள்ளார். கிட்டத்தட்ட அந்த காரின் விலை 15 லட்சத்திற்கும் மேலாக இருக்கிறது. தனக்காக இவ்வளவு பெரிய விஷயத்தை செய்த மகேந்திரா நிறுவனத்திற்கும் தன் அப்பா அம்மாவிற்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் பிரகனானந்தா.

 

View this post on Instagram

 

A post shared by Praggnanandhaa (@pragg_chess)

author avatar
Ranjith Kumar