#image_title
பிரபல திரைப்பட பாடல் ஆசிரியர் யுக பாரதியின் உண்மையான பெயர் பிரேம் குமார். இவர் சுப்ரமணிய பாரதியின் நினைவாக தனது பெயரை யுகபாரதி என மாற்றிக் கொண்டார். முதன் முதலாக ஆனந்தம் திரைப்படத்தில் இடம் பெற்ற பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடல் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார். காதல் பிசாசே, மன்மத ராசா, கொஞ்சம் நேரம் கொஞ்சம் நேரம் ஆகிய பாடல்களை எழுதியவர் யுக பாரதி. இவர் ராஜபாட்டை, நீலம், மைனா, கும்கி ஆகிய திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார். முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ஸ்ரீகாந்த், தனுஷ் உள்ளிட்டோரின் படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.
சமீபத்தில் யுகபாரதி அளித்த பேட்டியில் கூறியதாவது, பி.வாசு பாடல் ஆசிரியர்களுக்கான இயக்குனர் சொல்லுவேன். நான் பரமசிவம் படத்தில் பி.வாசுவுக்காக பாடல் எழுதினேன். அதுக்கு முன்னால் சந்திரமுகி படத்தில் பாடல் எழுதினேன். கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அந்த பாடலை நான் சந்திரமுகிக்காக எழுதிய பாட்டு இல்ல. அந்த பாட்டு மதுர திரைப்படத்திற்காக எழுதின பாட்டு.
கண்டேன் கண்டேன் உன் கண்கள் நான் கண்டேன் என்ற பாடலை எழுதி விட்டேன். அதன் பிறகு ஒரு ஆப்ஷனாக இந்த பாடலை எழுதி ஒரு டியூன் போட்டோம். அந்தப் பாட்டை தான் பிறகு சந்திரமுகி படத்தில் யூஸ் பண்ணாங்க. விஜய் படத்திற்காக எழுதின பாட்டு ரஜினிகாந்தின் படத்திற்கு யூஸ் ஆச்சுன்னு சொல்றது நிறைய பேருக்கு புதுசா இருக்கும். ஆனா அதுதான் உண்மை என கூறியுள்ளார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…