Categories: சினிமா

பிரபல நடிகரை அடிக்க துரத்திய அஜித் ரசிகர்கள்… இப்படிலாம் பண்ணதுனாலதான் ரசிகர் மன்றத்தையே கலைச்சாரா AK?

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் தியேட்டர்கள் திருவிழா கோலம் கொள்கின்றன.

இப்படி வெறித்தனமான ரசிகர்கள் இருந்தும் அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய ஆயிரக் கணக்கான ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். இதற்கு அவர் சொன்ன காரணம் ரசிகர்கள் தங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். தேவையில்லாமல் என் பெயரில் அவர்கள் நேரத்தை வீணடிக்கவேண்டியதில்லை. குடும்பத்தைக் கவனித்துக் கொண்ட பிறகு நேரம் கிடைத்தால் படத்தைப் பார்த்து ரசிக்கட்டும் என்றார்.

ஆனால் அஜித் தன்னுடைய ரசிகர்களுடனான தொடர்பை முறித்துக் கொண்டதற்குக் காரணம், அவர்கள் தன் பெயரைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயத்தை தேட முயன்றதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அஜித் மேல் உள்ள வெறித்தனமான அன்பால் பல ரசிகர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

#image_title

அப்படி ஒரு சம்பவத்தை பிரபல நடிகர் பாவா லட்சுமணன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “அஜித் ஜனா படத்தில் நடிக்கும் போது நானும் அவருடன் நடித்தேன். அப்போது அவரைக் காண 100 ரசிகர்கள் மொட்டைப் போட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருடனும் சேர்ந்து அஜித் தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொண்டார்.

அப்போது நான் கூட்ட நெரிசலை விலக்கிவிட்டேன். அது அவர்களுக்கு பிடிக்கலை போல. எல்லாம் முடிந்து உணவு இடைவேளையின் போது ஒரு கும்பல் என்னைத் தேடி வந்து “டேய் தொப்பை உன் வாயில குப்பை” எங்கள் தள்ளியா விட்ற என அடிக்க வந்துவிட்டார்கள். நான் சாப்பாட்டு தட்டை விட்டுவிட்டு அஜித்திடம் ஓடிவிட்டேன். அவர் என்னைக் காப்பாற்றி ‘உங்களுக்குத் தேவையான போட்டோ எடுத்துகிட்டீங்கள்ல, அவர் என் சக நடிகர், அவர்கிட்ட வம்பு பண்றீங்க.. கிளம்புங்க” என அனுப்பி வைத்தார். அப்படி வெறித்தனமான ரசிகர்கள் அஜித்துக்கு உண்டு” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

4 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

5 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

5 மணத்தியாலங்கள் ago