Categories: சினிமா

பிதாமகன் படத்துக்கு முன்பே விக்ரம், சூர்யாவை இணைத்து படமெடுக்க முயன்ற அமீர்… எந்த படம் தெரியுமா?

Spread the love

பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான சேது திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க முதலில் முரளிதான் ஒப்பந்தம் ஆனாராம். அப்போது அவர் பிஸியான நடிகராக இருந்தும் அந்த படத்துக்காக மொட்டை அடிக்க துணிச்சலாக சம்மதித்தாராம். ஆனால் அது நடக்காததால் அதன் பின்னர் விக்ரம்மை வைத்து சேது படத்தை எடுத்து பல போராட்டங்களுக்குப் பிறகு படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அந்த படம் ரிலீஸானதும் விக்ரம் மிகப்பெரிய நடிகர் ஆனார். அந்த ஒரு படத்தின் வெற்றி, அவரை 100க்கும் மேற்பட்ட கதைகளைக் கேட்கவைத்தது. அப்போது அவர் தனக்காக கதை கேட்க சேது படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் அமீரை தன்னிடம் வைத்துக் கொண்டு கதைக் கேட்டாராம்.

அதுபற்றி இப்போது பேசியுள்ள இயக்குனர் அமீர், “அப்போது 100க்கும் மேற்பட்ட கதை விக்ரம்முக்கு வந்தது. பாக்யராஜ் சாரெல்லாம் வந்து கதை சொன்னார். கௌதம் மேனன் காக்க காக்க படத்தின் கதையை வந்து சொன்னார். அவர் ஆங்கிலத்திலேயே சொன்னதால் எனக்குக் கதை புரியவில்லை.

அப்போது நானே ஒரு படம் பண்ண விக்ரம்முக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். ஆனால் மீண்டும் ஒரு அறிமுக இயக்குனரிடம் தன்னை ஒப்படைக்க அவர் விரும்பவில்லை. அப்போது நான் மௌனம் பேசியதே கதையை அவரை வைத்து டிசைன் செய்திருந்தேன். அதில் கௌதம் கதாபாத்திரத்தில் விக்ரம்மும்,  கண்ணன் கதாபாத்திரத்தில் சூர்யாவும் நடிப்பது போல டிசைன் செய்திருந்தேன்.

அதைப் பார்த்து சிவகுமார் சாரில் இருந்து விக்ரம் வரை அனைவருமே ரசித்தார்கள். ஆனால் நாளாக நாளாக எனக்கு விக்ரம் நமக்குப் படம் பண்ணமாட்டார் என்பது தெரிந்தது. அதனால் அவரிடம் கொடுத்த அட்வான்ஸை வாங்கிவிட்டேன். அதன்பின்னர்தான் சூர்யா மற்றும் நந்தா ஆகியோரை வைத்து  எடுத்தேன்” எனக் கூறியுள்ளார். அதன் பிறகு சூர்யாவும் விக்ரம்மும் இணைந்து பிதாமகன் படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.

vinoth

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

6 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

6 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

6 மணத்தியாலங்கள் ago