கடந்த வாரம் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வீர தீர சூரன். இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை HR pictures நிறுவனம் தயாரித்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்த நிலையில் இவருடன் இணைந்து எஸ் ஜே சூர்யா மற்றும் சுராஜ் ஆகியோர் நடித்த ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் செம விருந்து ஆக அமைந்தது.

ஆனால் சிலர் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை தெரிவித்து இருந்தனர். இந்த திரைப்படம் உலக அளவில் ஐந்து நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் உலக அளவில் இதுவரை 32 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சுமாரான வசூல் தான் என்று கூறப்படுகின்றது.

அதேசமயம் வீர வீர சூரன் படத்திற்கு போட்டியாக மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகிய கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் லூசிபர் 2 எம்புரான். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. கடந்த வாரம் 27ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

மேலும் சில காரணங்களால் தற்போது இந்த படத்தில் இருந்து மூன்று நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. கலவையான விமர்சனங்கள் இந்த படத்திற்கு இருந்தாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பில் வருகிறது. அதாவது ஐந்து நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எம்புரான் திரைப்படம் உலக அளவில் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. இந்த படத்தின் வசூலில் 10% வசூலை தான் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
