ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. கனா, எஃப் ஐ ஆர் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு வசனம் எழுதிய வருமான தமிழரசன் பச்சமுத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் பிரபலங்கள் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. குறிப்பாக அட்டகத்தி தினேஷ், நாயகியின் அப்பா கெத்து என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ள நிலையில் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்தப் படத்தில் பல விஜயகாந்த் பாடல்கள் பயன்படுத்தப்பட்டாலும் பொன்மனச் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்ற நீ பொட்டு வெச்ச தங்க குடம் என்ற பாடல் பெரிய புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு பாடலாக உள்ளது. தன்னுடைய முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் படத்தில் டைட்டில் முதல் ஆர்டிஸ்ட் வரை லப்பர் பந்து படத்திற்கு முதல் சாய்ஸ் வேறாகத்தான் இருந்துள்ளது. முதலில் இந்த திரைப்படத்தில் கெத்து கேரக்டருக்கு வைக்கப்பட்டிருந்த பெயர் ஜப்பான். ஆனால் அந்த டைட்டிலின் உரிமையை கார்த்தியின் படம் பெற்றுள்ளது. அதனால் அதன் பிறகு லப்பர் பந்து என்று டைட்டில் வைத்துள்ளனர். அதனைப் போல கெத்து கேரக்டரில் முதலில் இரண்டு பிரபலங்கள் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது நட்டி நடராஜன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியாமல் போனது.

பிறகுதான் அட்டகத்தி தினேஷ் கெத்து கேரக்டரில் நடித்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. அதனைப் போலவே அன்பு கேரக்டரில் ஹரிஷ் கல்யாண் நடித்த நிலையில் முதலில் ஹிப் ஹாப் ஆதி தான் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் யசோதை கதாபாத்திரத்தில் பிரியாமணியை நடிக்க வைக்க யோசித்த நிலையில் ஒரு இளம் பெண்ணுக்கு அம்மா கதாபாத்திரத்தில் அவர் நடிப்பாரா என்ற யோசனை இருந்ததால் அவரை நடிக்க வைக்கவில்லை. அடுத்து வரலட்சுமி யசோதா கதாபாத்திரத்திற்கு கொண்டுவர நினைத்த நிலையில் அதுவும் முடியாமல் போனது. பிறகுதான் சுவாசிக்கா இந்த கதாபாத்திரத்தை ஏற்ற சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் முதல் சாய்ஸ் வேறு விதமாக இருந்தாலும் கடைசியில் படம் பக்காவாக அமைந்தது.
