பாளையத்தம்மன் படத்தில் நடித்த குழந்தையா இது?.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

By Nanthini on ஐப்பசி 5, 2024

Spread the love

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் பக்தி படங்களுக்கு என்று எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் பாளையத்தம்மன். குழந்தை கைத்தறி உண்டியலில் விழுந்து விட அந்த குழந்தை அம்பாளுக்கு தான் சொந்தம் என்று கோவில் நிர்வாகம் சொன்ன பெற்ற தாய் மகளை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றார்.

   

அடுத்து நடந்தது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைகளம். இந்த திரைப்படத்தில் சிறுவயது பெண்ணாக அக்ஷயா ஜெயராம்  நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில திரைப்படங்களில் நடித்திருந்த இவர் அதன் பிறகு மொத்தமாக காணாமல் போய்விட்டார். படிப்பில் கவனம் செலுத்த இவர் சினிமாவை விட்டு விலகிய நிலையில் தற்போது மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வருகின்றார்.

   

 

இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாளையத்தம்மன் திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இன்றும் இவருடைய கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட பாளையத்தம்மன் படத்தில் நடித்த சிறுமியா இது ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே என கூறி வருகிறார்கள்.