பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் ஊழியராகப் பணியாற்றி வந்த 22 வயது பெண், தனது முன்னாள் வகுப்புத் தோழனும் காதலனுமான சஞ்சய் கெவின் (22) என்பவருடன் கோவா சென்றுள்ளார். கோவாவில் உள்ள மொல்லம் வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட தர்பந்தோரா காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற கெவின், அந்தப் பெண் வேறு நபருடன் பழகுவதாகச் சந்தேகித்துத் தான் தயாராகக் கொண்டு வந்த கத்தியால் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் பெண்ணின் போனை எடுத்துக்கொண்டு ஹுப்பள்ளிக்குத் தப்பியோடினார்.
காட்டுப்பகுதியில் கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய கோவா போலிஸார், தடயமே இல்லாத இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தினர். பெண்ணின் பர்ஸில் கிடைத்த பேருந்து டிக்கெட்டை ஆய்வு செய்தபோது, அது UPI மூலம் வாங்கப்பட்டது தெரியவந்தது. அந்த மொபைல் எண்ணை வைத்து 24 மணி நேரத்திற்குள் கொலையாளி சஞ்சய் கெவினைக் கண்டறிந்து கைது செய்தனர். போலிஸாரின் விசாரணையில், காதலில் ஏற்பட்ட சந்தேகத்தாலேயே இந்தத் கொடூரக் கொலையைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
