“கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட நாய்…” மருமகளை கடப்பாரையால் அடித்து கொன்ற மாமனார்…. 2 மகன்களை திருமணம் செய்தும் சோகத்தில் முடிந்த வாழ்க்கை…. பகீர்…!!

By Devi Ramu on புரட்டாதி 20, 2026

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த புத்தூர் மணக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி (65). இவரது மூத்த மகன் ராஜா இறந்துவிட்டதால், அவருடைய மனைவி வனவள்ளியைத் தனது இரண்டாவது மகன் ராமுவுக்கு மறுமணம் செய்து வைத்தனர். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், வனவள்ளியின் மாமியார் மலர்கொடி கிராமக் கோவில் பிரசாதத்தைக் கணவர் சிவசாமிக்காக வாங்கி வைத்துள்ளார். அந்த பிரசாதத்தை வனவள்ளி வளர்த்து வந்த நாய் சாப்பிட்டதால் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மதுபோதையில் இருந்த மாமனார் சிவசாமி, ஆத்திரத்தில் கடப்பாரையை எடுத்து மருமகள் வனவள்ளியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் வனவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வனவள்ளியின் மகன் தேவராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அம்மாபேட்டை போலிஸார், மாமனார் சிவசாமியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.