தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், பாபி அனோங் என்பவரின் வீட்டுக் குளத்தில் இருந்த விலையுயர்ந்த கோய் வகை மீன்களை அண்டை வீட்டைச் சேர்ந்த சுத்திச்சாய் பூன்லெர்ட் (51) என்ற நபர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளத்தில் இருந்த மீன்கள் அடுத்தடுத்து காயங்களுடன் இறந்து கிடந்ததால் சந்தேகமடைந்த உரிமையாளர் பாபி, சிசிடிவி காட்சிகளைச் பரிசோதித்தபோது சுத்திச்சாயின் இந்த அருவருப்பான செயல் வெளிச்சத்திற்கு வந்தது.
கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி போலிஸாரால் கைது செய்யப்பட்ட சுத்திச்சாய், “நான் குளத்தில் குளிக்க மட்டுமே சென்றேன். ஆனால் மீன்கள் அருகில் நீந்தியபோது போதையில் இருந்ததால் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்துவிட்டேன்” எனக் கூறினார். மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பிணி நாய் ஒன்றிடமும் இதுபோன்று அத்துமீறி கைது செய்யப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது அத்துமீறி நுழைதல், சொத்து சேதப்படுத்துதல் மற்றும் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
