“காதலனின் அறைக்கு சென்ற இளம்பெண்…” காதலியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு ஓடும் லாரி முன் பாய்ந்த காதலன்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 26, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, ஓடும் லாரியின் முன் பாய்ந்து 21 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கலேந்திரா பகுதியைச் சேர்ந்த பிரதீப் (21) என்பவரும், பொன்னேரி அருகே ராமனூரைச் சேர்ந்த திவிஜாஸ்ரீ (20) என்பவரும் ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலத்தில் தங்கித் தனித்தனியாகத் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், பிரதீப் தங்கியிருந்த அறைக்குத் திவிஜாஸ்ரீ வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பிரதீப், அரிவாளை எடுத்துத் திவிஜாஸ்ரீயை வெட்டிக்கொலை செய்தார்.

   

பின்னர் பயத்தில் வீதியை நோக்கி ஓடி வந்த பிரதீப், சாலையில் அதிவேகமாக வந்த லாரியின் முன் பாய்ந்தார். இதில் இடுப்புப் பகுதியில் லாரியின் சக்கரம் ஏறிப் பலத்த காயமடைந்த பிரதீப்பை பாகலூர் காவல்துறையினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாகலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.