தவெக தலைவர் விஜய் அரசியலில் நுழைந்து முதலமைச்சர் நாற்காலியிலும் அமர்ந்துவிட்ட நிலையில், அவரைப் பார்த்து நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன் ஆகியோருக்கும் அரசியல் ஆர்வம் அதிகரித்து வருவதும், அவர்களின் பின்னணியில் டெல்லி இயங்குவதாக உளவுத்துறை அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளதும் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
தங்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரகசிய மற்றும் வெளிப்படையான சந்திப்புகளை நடத்தி, அரசியலுக்கான ‘பல்ஸ்’ பார்க்கத் தொடங்கியுள்ள தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன் ஆகியோரின் நகர்வுகளை உளவுத்துறை தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்த உளவுத்துறை அறிக்கையை முதல்வர் விஜய்யின் மேஜையில் வைத்து அமைச்சர்களும் ஆலோசகர்களும் விவாதித்துள்ளனர்.
திமுக, அதிமுகவையைக் தாண்டி இளைஞர்களை ஈர்க்கும் சக்தி சினிமா ஹீரோக்களுக்கு மட்டுமே இருப்பதால், முதல்வர் விஜய்யின் இமேஜை உடைக்க டெல்லி தரப்பு இந்த நடிகர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்துதான், சென்னையில் நடந்த முஸ்லீம் லீக் பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “எந்த நடிகர் பொங்கலுக்கு டெல்லி சென்றார்? எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என்று பகிரங்கமாக எச்சரித்துப் பேசியுள்ளார். இனிவரும் காலங்களில் மற்ற அமைச்சர்களும் இந்த விவகாரத்தை மையப்படுத்தி டெல்லியின் சதித் திட்டங்களை அம்பலப்படுத்துவார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
