“பரிசு வாங்கித்தரேன் வா” கள்ளக்காதலியை ஏமாற்றி கூட்டிச்சென்ற காதலன்… கால்வாயில் கிடந்த சடலம்.. அதிரவைக்கும் பின்னணி..!!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் பண்டரிபுரம் வட்டத்தில் உள்ள போஸே கிராமத்தைச் சேர்ந்த சோனாலி நேதாஜி ஜாதவ் (34) என்ற சமூக வலைதளப் பிரபலம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் பிரபலமான இவர், தனது கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த துக்காராம் காவந்தரே என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், சோனாலிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக துக்காராம் சந்தேகப்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த துக்காராம், சோனாலியைக் கொலை செய்யத் திட்டமிட்டார். கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி, பிறந்தநாள் பரிசு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி சோனாலியைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு சோனாலி வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதற்கிடையில், ரோப்ளே பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அது காணாமல் போன சோனாலி என்பது உறுதி செய்யப்பட்டது. சந்தேகத்தின் பேரில் துக்காராமைக் கைது செய்து விசாரித்தபோது, சோனாலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து சடலத்தைக் கால்வாயில் வீசியதை அவர் ஒப்புக்கொண்டார். இக்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

கண்ணீர் விட்டு கதறி உயிரை விட்ட அதிமுக நிர்வாகி… பதறியடித்து ஓடிவந்த எடப்பாடி பழனிசாமி… கலங்க வைக்கும் வீடியோ…!

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களும் பிளவுகளும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் மன…

6 minutes ago

“கோடிகளை கொட்டி பதவி வாங்கினாங்க”… ஸ்டாலின் – எடப்பாடி ரகசிய கூட்டணி?.. உடைத்து நொறுக்கிய தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்…!

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி, மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…

11 minutes ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. 1800 பள்ளிகளில் இது இல்லையா?… சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்….!

தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கல்வித்துறையின் தற்போதைய அவலநிலை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

15 minutes ago

இது என்னப்பா புதுசா இருக்கு?… தனுஷ் அடுத்த முதலமைச்சரா?… ப்ளூ சட்டை மாறனின் ஒற்றை ட்வீட்டால் கோலிவுட்டில் வெடித்த அரசியல் பூகம்பம்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பதும், அதுகுறித்த விவாதங்கள் எழுவதும் காலம் காலமாக தொடரும் ஒரு வழக்கமான…

20 minutes ago

அமித் ஷா விடுத்த அவசர அழைப்பு… டெல்லி பறக்கும் அண்ணாமலை… தமிழக அரசியலில் வெடிக்கப் போகும் அடுத்த அணுகுண்டு….!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மீண்டும் அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இன்று…

26 minutes ago

“அறிவாலயம் அல்ல… குடகு மலை ரிசார்ட்டில் ஸ்டாலின் போட்ட ‘அந்த’ ரகசிய பிளான்”… பதவியை இழக்கப்போகும் மூத்த தலைவர்கள் யார் யார்…?

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த திராவிட…

32 minutes ago