பணம், நகைகளை வரதட்சணையாக கொடுத்து ரம்யா பாண்டியனை கரம் பிடித்த காதலர்.. காரணம் என்ன தெரியுமா..?

By Nanthini on மார்கழி 30, 2024

Spread the love

ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்த நடிகைகள் மட்டுமே அதிகம் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் பல திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். அதன்படி திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய சித்தப்பா அருண் பாண்டியன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தாலும் அவருடைய உதவியை நாடாமல் தனியாக வாய்ப்பு தேடி தன்னுடைய முயற்சியில் வெற்றியும் கண்டார்.

நடிகை ரம்யா பாண்டியனுக்கு காதல் திருமணம்.., மாப்பிள்ளை யார் தெரியுமா? -  லங்காசிறி நியூஸ்

   

இவர் ஜோக்கர் திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தும் அசத்தினார்.இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்ற போதும் ரம்யா பாண்டியனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பட வாய்ப்பு பிடிக்க போட்டோ சூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

மாமியாருக்கு propose செய்த ரம்யா பாண்டியனின் கணவர்... திருமண வரவேற்பு -  Exclusive வீடியோ - மனிதன்

 

இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. தற்போது இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் யோகா பயிற்சியாளர் லவல் தவான் என்பவரை காதலித்து வந்த நிலையில் அவருடன் சமீபத்தில் தான் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நடிகை ரம்யா பாண்டியனுக்கு காதல் திருமணம்.., மாப்பிள்ளை யார் தெரியுமா? -  லங்காசிறி நியூஸ்

இந்நிலையில் ரம்யா பாண்டியனின் காதல் திருமணம் குறித்து பலரும் அறியாத தகவலை அவருடைய தாயார் சாந்தி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதன்படி ரிஷிகேசில் லவல் தவானிடம் ரம்யா பாண்டியன் தான் முதன் முதலில் ப்ரபோஸ் செய்திருக்கிறார். அவருக்கு பிடித்திருந்தாலும் தன்னுடைய குருஜி ரவிசங்கர் ஓகே சொன்னால்தான் திருமணம் என கூறியுள்ளார் லவல். பிறகு ரம்யா பாண்டியன் ரவிசங்கரிடம் பேசி ஓகே வாங்கிய பிறகு தான் இவர்கள் திருமணம் நடைபெற்று உள்ளது. ரிஷிகேசன் இருவரும் சந்தித்துக் கொண்டதால் அங்கேயே திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.
Ramya Pandian and her Husband Lovel Dhawan Honeymoon Photos viral : திருமணம்  முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற ரம்யா பாண்டியன் - அதுவும் எங்க தெரியுமா?
தவான் ரம்யாவின் வீட்டுக்கு கார்த்திகை தீபம் நாளில் வந்த போது திடீரென்று மண்டியிட்டு ரம்யாவின் அம்மாவிடம் நீங்க என்னோட மாமியாரா வருவீங்களா என்று கேட்டுள்ளார். அப்போது பதில் சொல்ல முடியாமல் திணறிய ரம்யாவின் அம்மா, அவர் தன் பெண்ணை பாசத்தோடு பார்த்துக் கொள்வதை பார்த்து சம்மதம் தெரிவித்துள்ளார். தவான் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களின் வழக்கப்படி பெண்கள் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை எதுவும் வாங்க மாட்டார்கள். அதற்கு மாறாக பெண் வீட்டாரருக்கு மாப்பிள்ளை வீட்டார் தான் வரதட்சணை கொடுப்பார்கள்.
Tamil Actress Ramya Pandian Marries Yoga Instructor Lovel Dhawan. See First  Pics Of Newlyweds | காதல் கணவருடன் நடிகை ரம்யா பாண்டியன் - க்யூட் ஃபோட்டோ  ஷூட்!
அதனால் ரம்யா பாண்டியனுக்கு பெரும் தொகையை வரதட்சணையாக கொடுத்தது மட்டுமல்லாமல் நகைகளையும் வாங்கி கொடுத்துள்ளனர். மேலும் திருமண செலவுகளையும் தாங்களை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளனர். ஆனால் ரம்யா பாண்டியன் குடும்பத்தினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான செலவை ஏற்று சென்னையில் பிரமாண்டமாக அதனை நடத்தி முடித்தனர். அதேசமயம் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு முதல் முதலில் ரம்யா பாண்டியன் கேசரி செய்து கொடுத்தாராம். இதனால் இம்ப்ரஸ் ஆன ரம்யா பாண்டியன் மாமியார் தனது மருமகளுக்கு ஒரு லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இந்த தகவலை ரம்யா பாண்டியனின் தாயார் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.