பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரேஷ்மா தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஓவர் நைட்டில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். இவருடைய புஷ்பா கதாபாத்திரம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது.
இதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ரேஷ்மா விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இளைஞர்களை கவர்ந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சீரியல் வாய்ப்பு கிடைத்த நிலையில் சின்னத்திரை நுழைந்தார். அதன்படி விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி தற்போது மக்களின் ஃபேவரட் நடிகையாக பலம் வந்து கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் பயணித்து வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம். இந்த நிலையில் ரேஷ்மா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் இன்று பெரிய திரையில் இருக்க முக்கிய காரணமே என்னுடைய கசின் சகோதரர் பாபி சிம்ஹா தான்.
இவர் தான் பேசி எனக்கு சினிமாவுல வாய்ப்பு வாங்கி கொடுத்தாரு. நாங்க ரெண்டு பேரும் அந்த அளவுக்கு க்ளோஸ். அவன் இல்லனா இன்னைக்கு நான் இங்க இல்ல. அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு தான் மேல வந்தோம். அவனோட வளர்ச்சிக்கு அவன் உழைப்பு மட்டும் தான் காரணம் இன்று ரேஷ்மா பேசியுள்ளார்.