இன்றைய காலகட்டத்தில் மக்கள் பணத்தை சேமிப்பதற்கும் பல விஷயங்களை முதலீடு செய்வதற்கும் ஆரம்பித்து விட்டார்கள். உண்மையிலேயே அது நல்ல விஷயம் தான். நமக்கு கிடைக்கும் வருமானம் குறைவாக இருந்தாலும் நாம் திட்டமிட்டு அதை சேமிக்கும் பொழுது நல்லதொரு வாழ்க்கையை நம்மால் நடத்த முடியும். சமீபத்திய காலங்களில் இந்த SIP முதலீடு மிகப் பிரபலமாக ஆகிக்கொண்டிருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் மக்கள் முதலீடு செய்து வருகிறார்கள். தற்போது அது சம்பந்தமாக ஒரு முதலீட்டை பற்றி இனி காண்போம்.

SIP இன்வெஸ்ட்மென்டில் அதிக வட்டி மற்றும் வருமானம் தருவதால் சாமானிய மக்கள் விரும்பும் முதலீடாக இது இருக்கிறது. SIP முதலீட்டின் சிறப்பு அம்சம் மாதம் ரூபாய் 500 என்று அளவில் கூட முதலீடு செய்யலாம். அந்த வகையில் ரூபாய் 3000 என்ற அளவில் மாதாந்திர SIP முதலீடு செய்யும்போது 10, 20, 30, 40 ஆண்டுகளில் எந்த அளவுக்கு உங்களுக்கு வருமானம் கிடைக்கும் எந்த அளவுக்கு பணத்தை சேமிக்க முடியும் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
மியூச்சுவல் பண்டு திட்டத்தில் மாதம் ரூபாய் 3000 SIP முதலீடு செய்யும் போது பத்து ஆண்டுகளில் அதில் கூடுதல் வட்டி வருமானம் உங்களுக்கு கிடைக்கிறது. SIP முதலீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 12 சதவீதம் வருமானம் தருகிறது என்கிறார்கள் நிபுணர்கள். சில சிறந்த முதலீடுகள் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் கூட வருமானம் கொடுத்திருக்கிறது. இதன் ஆண்டு வருமானம் சராசரியாக 12 சதவீதம் என்ற வட்டி அடிப்படையில் 3000 முதலீடு செய்யும் போது பத்து ஆண்டுகளில் சுமார் 7 லட்சம் கிடைக்கும். இதில் முதலீட்டு தொகை ரூபாய் 3, 60,000 ஆயிரம் என்ற அளவிலும் மூலதன ஆதாயம் ரூபாய் 3,40,000 என்ற அளவில் இருக்கும்.
இதே மாதம் 3000 முதலீடு 20 ஆண்டுகள் வைக்கும் போது சராசரி ஆண்டு வருமானம் 12 சதவீதத்தில் அடிப்படையில் ஒருவருக்கு 20 ஆண்டுகளில் ரூபாய் 30 லட்சம் நிதியை உருவாக்க முடியும். இதில் முதலீட்டு தொகை ரூபாய் 7,20,000 ஆகவும் மூலதன லாபம் ரூ 22,80,000 ஆயிரம் ஆக இருக்கும்.
அடுத்ததாக 3000 முதலீட்டில் 30 வருடங்கள் நீங்கள் இந்த முதலீட்டை மேற்கொள்ளும் போது உங்களுக்கு சேர்ந்திருக்கும் நிதியானது ஒரு கோடிக்கும் அதிகமான பணம் கிடைக்கும். அதில் முதலீட்டு தொகை ரூபாய் 10,80,000 ஆகவும் மூலதன லாபம் ரூபாய் 95 லட்சம் என்ற அளவிலும் இருக்கும். 40 வருடங்களுக்கு நீங்கள் தொடர்ந்தால் உங்களது சேமிப்புத் தொகை ரூபாய் 3.5 கோடி கிடைக்கும். முதலீடு 14,40,000 ஆகவும் மதிப்பிடப்பட்ட மூலதன லாபம் ரூபாய் 3.5 கோடி என்று அளவில் இருக்கும்.

இந்த SIP முதலீடு வருமானம் கிடைத்தாலும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது தான். நீங்கள் இதில் முதலீடு செய்யும்போது இது சார்ந்த அபாயங்களை அறிந்திருக்க வேண்டும். முதலீட்டாளர்கள் எப்பொழுதும் தங்கள் வருமானம் இலக்கு ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றை வைத்து அதற்கு ஏற்ப முதலீடு செய்தால் நல்ல பலனை பெற முடியும்.
