லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைப்பட எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2016 ஆம் ஆண்டு குறும்படம் இயக்கியதன் மூலம் தனது கேரியரை தொடங்கினார் லோகேஷ் கனகராஜ். 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். 2019 ஆம் ஆண்டு கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று லோகேஷ் கனகராஜ் பிரபலமானார். அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து 2021 ஆம் ஆண்டு மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் வெற்றி பெறவே முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக ஆனார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு கமலஹாசன் வைத்து விக்ரம் 2023 ஆம் ஆண்டு லீயோ ஆகிய படங்களை இயக்கி புகழ்பெற்றார்.

தற்போது அடுத்ததாக கைதி 2 விக்ரம் 2 என பல படங்களை கைவசம் வைத்து பிசியாக இருந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜிடம் பெரிய பெரிய ஸ்டார் எல்லாரோடும் படம் எடுத்து விட்டீர்கள்.

அடுத்து அஜித்தோடு எப்போது படம் எடுக்க போகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அஜித் குமார் சாருடன் வொர்க் பண்ண வேண்டும் என்பது பயங்கர ஆசை .அதனால் கூடிய சீக்கிரத்தில் அது நடந்து விடும் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதனால் அடுத்த பிளாக்பஸ்டர் சம்பவம் காத்திருக்கு என்று ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.
