12 வயசுலேயே சூப்பராக பாட்டு பாடி அசத்திய ஸ்ரேயா கோஷல்… வைரலாகும் Unseen வீடியோ..!

By Soundarya on தை 9, 2025

Spread the love

தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான பாடகி  ஷ்ரேயா கோஷல். இவர் 1584 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி மேற்கு வங்காளத்தில் பிறந்தார். 2000ம் ஆண்டு தனது 16-வயதில், ஜீ டிவி நடத்திய ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட ஸ்ரோயா தனது பாடல் மூலம் நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் சஞ்சய் லீலா பான்சாலியின் மனதை கவர்ந்தார். இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்க முடிவெடுத்த சஞ்சய், தனது அடுத்த படமான ‘தேவதாஸ்’ படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களையும் இவரயே பாட வைத்துள்ளார்.

   

இவர் ‘சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தில் ‘முன்பே வா’ என்ற பாடலை பாடியுள்ளார். மேலும் ‘7ஜி ரெயின்போ காலனி’ என்ற படத்தில் ‘நினைத்து நினைத்து பார்த்தால்’மற்றும்   பருத்திவீரன் படத்தில் ‘ஐயைய்யோ என் உசுருக்குள்ள’போன்ற பாடல்களை பாடி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.இதைத் தொடர்ந்து வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தில் ‘பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு’ என்ற பாடலையும் பாடியுள்ளார்.

   

 

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.  இதை தொடர்ந்து இவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில்  ‘மன்னிப்பாயா’ என்ற பாடலை பாடியும், சுந்தர பாண்டியன் என்ற பாடத்தில் ‘இறக்கை முளைத்ததேன்’ என்ற பாடலை பாடியும், ‘எதிர்நீச்சல்’ படத்தில் ‘மின்வெட்டு நாளில் இங்கே’  போன்ற பாடல் பாடி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய 12 வயதில் பாடிய பாட வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களோ ஸ்ரேயா சிறுவயதில் எப்படி இருக்கிறார் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by 90’s Flashback (@90s_flashbac)