சென்னையை தலைமை இடமாகக் கொண்டு ஹெல்த் ஆன் ஹங்கர் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் சர்வதேச உணவு நாளை முன்னிட்டு பசித்தவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடங்களை தேடி சென்று உணவு வழங்குகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த தொண்டு நிறுவனத்தினர் உணவு வழங்குகின்றனர்.
அக்டோபர் 14-ஆம் தேதி (இன்று) உலக உணவு நாளை முன்னிட்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மொய் விருந்து என்ற உணவு வழங்கும் பயணத்தை நடத்தினர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் கொடி அசைத்து அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 5000 நபர்களுக்கு பிரியாணி கொடுக்கப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் இது போன்ற மக்கள் நலத்திட்டங்களில் கலந்து கொள்ளும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் விளம்பர தூதுவராக இருக்கிறார். இந்த ஆண்டு மொய் விருந்து பயணத்தில் அவர் கலந்து கொண்டார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கையால் கமகம பிரியாணி… அசந்து போன லோகேஷ் கனகராஜ்!#Chennai #AishwaryaRajesh #Biryani #lokeshKanakaraj #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/XWZuF9pHDr
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) October 14, 2024
அவருடன் பிரபல இயக்குனரான லோகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுக்கும் இந்த நிகழ்ச்சியை இருவரும் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
