அஜித் நடிப்பில் கடைசியாக 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதன் பிறகு அவரது படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனை அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்தார். அந்த படம் துவங்கிய நாள் முதலே பிரச்சனை ஏற்பட்டு படபிடிப்பு தள்ளிப்போனது. விடாமுயற்சி படத்தில் திரிஷா, அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

விடாமுயற்சி படத்தை தயாரித்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால் இடைவெளி விட்டு தான் படத்தை ஷூட்டிங் செய்தனர். இதற்கு இடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க அஜித் கமிட்டானார். பல வருடங்களுக்குப் பிறகு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி பட சூட்டிங் மாறி மாறி அஜித் கலந்து கொண்டார்.

இப்போது சூட்டிங் முடிவடைந்தாலும் ரிலீஸ் செய்வதில் அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டது. நவம்பர் 14-ஆம் தேதி விடா முயற்சி ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டனர். ஆனால் அன்று சூர்யாவின் காங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டால் விடுதலை 2 திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

கடைசியாக பொங்கலுக்கு விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்யலாம் என பட குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் அதற்கும் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படம் வேட்டு வைத்தது. அமெரிக்காவில் ராம்சரனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அஜித்தை விட ராம் சரணுக்கு அமெரிக்காவில் அமோக வரவேற்பு இருப்பதால் விடாமுயற்சி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று அறியாமல் படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.
