தமிழகத்தில் இன்று(டிச..8) இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்களில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான இந்த கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் 8 இன்று திங்கட்கிழமை காலை நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு காஞ்சிபுரத் மாவட்டத்தில் உள்ள 149 பள்ளிகளுக்கும் டிசம்பர் 8 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.