ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை நாளன்று குமரி மற்றும் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஜூலை 24ஆம் தேதி ஆடி அமாவாசை வருவதால் அன்றைய தினம் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதனால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
