புதுச்சேரி காமராஜர் நகரில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் ஜான் குமார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தொழிலதிபர் மார்ட்டின் அவர்களின் மகனான ஜோஸ் சார்லின் மார்பின் அவர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ஏராளமான உதவி திட்டங்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி எம்எல்ஏ அலுவலகத்தில் உணவு கூட மூன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஏராளமான மக்கள் பசி ஆறுகிறார்கள். வாரத்தில் மூன்று நாட்களுக்கு சைவம் மூன்று நாட்களுக்கு அசைவம் என்று ஒரு நாளைக்கு ஏறத்தாழ 700 மக்கள் இங்கே இலவசமாக உணவருந்தி செல்கிறார்கள்.
மாம்பழ வியாபாரிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற பிரதமரின் அறிவுறுத்தலின் பெயரில் இங்கு உணவருந்துபவர்களுக்கு இலவசமாக தினமும் மாம்பழமும் வழங்கப்படுகிறது. இந்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது. இதற்கு முன்னதாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிகவின் தலைவருமான மறைந்த நடிகர் விஜயகாந்த் மக்கள் அனைவருக்கும் சாப்பாடு போட்டு அதன் மூலம் மகிழ்ச்சி கண்ட நிலையில் தற்போது கேப்டன் பாணியில் புதுச்சேரியில் பாஜக செயல்பட்டு வருவது பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
