குழந்தைகளை சிரிக்க வைக்க தந்தை செய்த காரியம்… எமனாக மாறிய தொட்டில் கயிறு… குழந்தைகள் கண்முன்னே உயிரிழந்த பரிதாபம்..!!

By Soundarya on ஆடி 16, 2025

Spread the love

மதுரை மாவட்டம் கோ.புதூர் காந்திபுரம் மணிமாறன் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்த கோபால். 38 வயதான இவர் தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய குழந்தைகளை சிரிப்பை வைப்பதற்காக விபரீதமாக தொட்டில் கயிற்றை தன்னுடைய கழுத்தில் சுற்றிக்கொண்டு முருகானந்தகோபால் விளையாடியிருக்கிறார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தில் இறுக்கி உயிருக்கு போராடி சற்று நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை பார்த்து அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதுள்ளார்.  இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.