திருவண்ணாமலை மாவட்டம் தண்டரம்பட்டு வட்டம் கீழ்வவலசை என்ற கிராமத்தில் வித்தியாசமான உயிரினம் ஒன்று உலாவுவதாகவும் திடீரென்று காட்டில் ஒரு பெண்ணை தாக்கியதாகவும் குறிப்பிட்டு சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய அந்த வினோத விலங்கு இதுதான் என்று பரவி வரும் இந்த தகவலை அறிந்த பகுதி சேர்ந்த மக்கள் பீதியில் உள்ளார்கள். இந்த நிலையில் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது .
அதாவது இது முற்றிலும் வதந்தி. நீளமான நகங்கள், நான்கு விரல்களை கொண்ட கால்கள் , ஆட்டின் தலையுடைய மனித உருவிலான வித்தியாசமான உயிரினத்தின் புகைப்படம் 2017 ஆம் வருடம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை ஆடு மனிதன் என்றும், வேற்றுக்கிரகவாசி என்றும் குறிப்பிட்டு அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் வதந்தி பரப்பப்பட்டது .2011 ஆம் வருடம் கிராபிக்ஸ் போட்டிக்காக உருவாக்கப்பட்ட படம் இது. இதைத்தான் தற்போது பகிர்ந்து திருவண்ணாமலை நடந்த சம்பவம் என்று வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
