BREAKING: ரூ.9 கோடி இழப்பீடு.. நடிகர் ரவி மோகன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

By Nanthini on ஆடி 16, 2025

Spread the love

பட தயாரிப்பு நிறுவனத்திடம் ஒன்பது கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் தொடர்ந்து வழக்கில் தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. 80 நாட்கள் கால் சூட் கொடுத்தும் படப்பிடிப்பை தொடங்கவில்லை என்று ரவி மோகன் தெரிவித்திருந்தார். சம்பளம் ஆறு கோடியை திருப்பித் தரக்கோரி பாபி டச் கோல்ட் யுனிவர்சல் தாக்கல் செய்த வழக்குடன் இந்த வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

கோவையை சேர்ந்த பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம் இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்த நிலையில் ஒப்பந்தப்படி படப்பிடிப்பை தொடங்காததால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் , மனுவுக்கு பதிலளிக்கும் படி தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்ட விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.