“குஷியோ குஷி” வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவுகள்… ரயில்வே அமைச்சகம் உத்தரவு..!!

By Soundarya on மார்கழி 14, 2025

Spread the love
வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவு வகைகள் வழங்க ரயில்வே அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி ரயில்வே துறையின் கீழ் இயங்கும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) இந்தப் புதிய நடைமுறையை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் செல்லும் குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு ஏற்ப, அந்தந்தப் பகுதிகளின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பிரபலமான உள்ளூர் உணவு வகைகள் மெனுவில் சேர்க்கப்படும்.

பயணிகளுக்கு ஆரோக்கியமான, சுகாதாரமான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது நாடு முழுவதும் உள்ள அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.