ஹோட்டலில் விடிய விடிய உல்லாசம்… அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்திய காதலி… ஆத்திரத்தில் அடுத்த நொடியே காதலன் செய்த கொடூரம்…!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தை சேர்ந்த அமீத் நிஷாத் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் ஆக மாறியது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். இதனிடையே அந்தப் பெண்ணுக்கு அமீத் நிஷாத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த நபரை அந்தப் பெண் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் அமித் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று இருவரும் லூதியானாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்தப் பெண் அமீத்தின் அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் வழியில் துடித்த அமித் ஆத்திரத்தில் அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

   

பிறகு ஹோட்டல் ஊழியர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.