பச்சை முட்டை சாப்பிடுவது… வேகவைத்த அவித்த முட்டை சாப்பிடுவது – இதில் எது நல்லது தெரியுமா?

By Elango on மார்கழி 14, 2025

Spread the love

முட்டை ஒரு போஷாக்கான உணவாகும். சிலர் பச்சை முட்டையை அப்படியே உடைத்து சாப்பிடுகின்றனர். சிலர் அவித்த முட்டையை விரும்பி சாப்பிடுகின்றனர். இதில் எது சிறந்தது என்பதை இப்போது தெரிந்துக் கொள்ளலாம். பச்சை முட்டையில் உள்ள கால்சியம் வைட்டமின் டி இரும்பு கோலின் பயோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு விடும்.

பச்சை முட்டையில் சால்மோனெல்லா பாக்டீரியா இருக்கும் அபாயம் உள்ளது. இது சமைத்தால் மட்டுமே அழியும். சமைத்த முட்டையில் சில ஊட்டச்சத்துக்கள் குறையலாம். ஆனால் பாதுகாப்பு அதிகம். ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உறிஞ்சப்பட வேண்டும் என நினைப்பவர்கள் குறிப்பாக குழந்தைகள் விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் 2 நிமிடங்களுக்கு வேக வைத்த முட்டையை சாப்பிடலாம். இது மிகவும் நல்லது என்று ஊட்டச்சத்து ஆலோசகர்கள் கூறுகின்றனர்.