“நான் உங்களுக்கு பிரைவசி தருகிறேன்…” பார்வதியின் செயலால் கடுப்பான விஜய் சேதுபதி… கொஞ்சம் ஓவரா தான் போறாங்க…!!

By Devi Ramu on மார்கழி 14, 2025

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் சமீபத்திய ப்ரோமோவில், போட்டியாளர்கள் பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு நடிகர் விஜய் சேதுபதி தண்டனை கொடுத்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே, பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோரின் செயல்பாடுகள், குறிப்பாக மைக்கைக் கழற்றி வைத்துப் பேசுவது போன்ற செயல்கள் தொடர்ந்து சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி வந்தன.

போட்டியாளர்களின் விதிமீறல் காரணமாக, பிக் பாஸ் அவர்களுக்கு மட்டும் அல்லாமல், வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கும் சேர்த்து, டீ, காபி, முட்டை போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கட் செய்து தண்டனை வழங்கினார். ஆனாலும் அந்த இருவரும் தங்கள் செயல்களை மாற்றிக் கொள்ளவில்லை.

   

இந்த நிலையில், சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி, பார்வதி மற்றும் கம்ருதீனை அழைத்து, “நீங்கள் யார் என்ன சொன்னாலும் கேட்கவில்லை, குற்ற உணர்ச்சி இல்லாமல் நடந்துகொள்கிறீர்கள்” என்று கேள்வி கேட்கிறார். பின்பு அவர் அவர்களுக்கு, “நீங்கள் இனி மைக்கை கழட்டி வைத்துவிட்டுப் பேசிக்கொள்ளுங்கள், நான் உங்களுக்குப் பிரைவசி தருகிறேன்” என்று கேலியாகக் கூறினார்.

   

அவர்கள் இருவரும் மைக்கைக் கழட்டிவிட்டுப் பேசியபோது, “பார்வதி பேசுவது எனக்குக் கேட்கவே இல்லை” என்று சொல்லி, பார்வதியை அசிங்கப்படுத்துவது போல விஜய் சேதுபதி மேடையில் இருந்து கிளம்பிச் சென்றார். விஜய் சேதுபதியின் இந்தக் கடுமையான நடவடிக்கை, ஒருபுறம் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தாலும், ரெட் கார்டு கொடுக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.