தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2025 ஜனவரி 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்ந்த பல்வேறு உயர் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கான பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, மேலும் 6 மாதங்களுக்கு (ஏப்ரல் 19 வரை) பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு தற்போது அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த நீட்டிப்பின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அன்றாட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் நலச் சேவைகள் தடையின்றித் தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
