திரையுலகில் அதிர்ச்சி… இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மீண்டும் ஒரு சோகம்… சற்றுமுன் வெளியான காரணம்…!

By Swetha on ஐப்பசி 20, 2026

Spread the love

இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்புகள் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளன. தேவாவின் உறவினரான கார்த்திக் சபேஷ் (37), கடந்த இரண்டு மாதங்களாக சிறுநீரக பாதிப்பு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் அவருக்குத் டயாலிசிஸ் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கடந்த இரண்டு வாரங்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு குடும்பத்தினரையும் திரையுலக நண்பர்களையும் மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கார்த்திக் சபேஷின் தந்தை கடந்த ஆண்டுதான் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.