திமுகவிற்கு அதிர்ச்சி… EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்… அரசியலில் பெரும் பரபரப்பு…!

By Swetha on ஐப்பசி 20, 2026

Spread the love

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் பிரமுகரான வி. பண்டரிநாதன், திமுகவில் இருந்து விலகி, அக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்திருப்பது டெல்டா அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவில் இணைந்த இவர், தஞ்சை கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலையின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். கட்சி மேலிடத்தின் மீதான அதிருப்தி மற்றும் உள்ளூர் நிர்வாகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளே இவரது இந்த திடீர் கட்சித் தாவலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

மறுபுறம், டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே பல அதிமுக பிரமுகர்கள் திமுகவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், பண்டரிநாதன் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வரும் கால தேர்தல்களைக் முன் வைத்து டெல்டா மண்டலத்தில் தங்கள் பலத்தை நிரூபிக்க முயலும் அதிமுகவிற்கு, இவரது வருகை கூடுதல் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆளுங்கட்சியான திமுகவிலிருந்து முக்கியப் பிரமுகர் ஒருவர் வெளியேறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.