“ரொம்ப கஷ்டப்பட்டேன்…” தயவுசெஞ்சி இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க…! மனம் உருகி பேசிய நடிகர் அப்புக்குட்டி…!!

By Devi Ramu on ஐப்பசி 20, 2026

Spread the love

தேசிய விருது வென்ற பிரபல நடிகர் அப்புக்குட்டி, ‘பண்டமாற்று’ குறும்பட விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, திரைத்துறையில் உள்ள நடிகர்கள் யாரும் கடன் வாங்கி கார் வாங்கி மாட்டிக்கொள்ள வேண்டாம் எனத் தனது சொந்த அனுபவத்திலிருந்து உருக்கமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை போன்ற யதார்த்தப் படங்கள் மூலம் அறியப்படும் அப்புக்குட்டி பேசுகையில், சினிமாவில் உள்ளவர்களில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே வசதியாக இருப்பதாகவும், ஒரு மாதம் வருமானம் வந்தால் அடுத்த பல மாதங்களுக்கு வருமானம் இல்லாத சூழல் நிலவுவதாகவும் குறிப்பிட்டார். தான் முன்பு காரை அடமானம் வைத்து அனுபவித்த கஷ்டங்களைச் சுட்டிக்காட்டிய அவர், வட்டிக்குப் பணம் வாங்கியும் லோன் போட்டும் கார் வாங்கும் தவறை நடிகர்கள் யாரும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.