அதிர்ச்சி.! கோல்டு காயின் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. RBI போட்ட அதிரடி தடை… சிக்கலில் முதலீட்டாளர்கள்..!!

By Soundarya on மாசி 4, 2026

Spread the love

கடந்த சில நாட்களாக தங்கம் விலை சுமார் 15% வரை சரிந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் பலரும் தங்கக் காசுகள் (Coins) மற்றும் பிஸ்கட்டுகளாக வாங்கி அதிகளவில் முதலீடு செய்தனர். தற்போது விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், அவசரத் தேவைக்காகவோ அல்லது லாப நோக்கிலோ இந்தத் தங்கத்தை வங்கிகளில் அடகு வைத்து நகைக் கடன் (Jewel Loan) பெற முயன்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, வங்கிகள் தங்கக் காசுகள் அல்லது பிஸ்கட்டுகளை அடமானமாகப் பெற்றுக்கொண்டு கடன் வழங்க அனுமதி இல்லை. ஆபரணத் தங்கத்திற்கு மட்டுமே நகைக் கடன் வழங்கப்படுகிறது. இதனால், வங்கிகளுக்குச் சென்ற பலரும் தங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். எனவே, எதிர்காலத்தில் அவசரத் தேவைக்கு வங்கிக் கடன் பெறத் திட்டமிடுவோர், தங்கத்தை முதலீடு செய்யும் போது காசுகளாக வாங்காமல் ஆபரண நகைகளாக வாங்குவதே சிறந்தது என நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.