பெற்றோர்களே ஜாக்கிரதை..! சிப்ஸ் பாக்கெட்டுக்குள் உயிருடன் நெளிந்த புழுக்கள்.. பிரிக்கப்படாத கவரில் காத்திருந்த அதிர்ச்சி…!!

Spread the love

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில், சீல் வைக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டுக்குள் உயிருடன் புழுக்கள் நெளிந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சோனி குமார் என்பவர் தனது 2 வயது குழந்தைக்குக் கொடுத்த சீல் செய்யப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டைப் பிரித்தபோது, அதனுள் உயிருள்ள புழுக்கள் நெளிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்தத் தகவல் காட்டுத்தீயாய் பரவியதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் கடை உரிமையாளர் சிப்ஸ் பாக்கெட்டைச் சோதித்தனர். அப்போது பேக் செய்யப்பட்ட அந்த சிப்ஸ் பாக்கெட்டிற்குள் புழுக்கள் நெளிவது உறுதியானது. இது குறித்து உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளிலேயே இத்தகைய சுகாதாரமற்ற நிலை இருப்பது நுகர்வோரின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அந்த சிப்ஸ் பாக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அந்த குறிப்பிட்ட தொகுப்பில் (Batch) தயாரிக்கப்பட்ட மற்ற பாக்கெட்டுகளையும் விற்பனையிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். குழந்தைகளின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இத்தகைய அலட்சியப்போக்கு குறித்து அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

8 minutes ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

18 minutes ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

40 minutes ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

50 minutes ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

2 மணத்தியாலங்கள் ago