சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 73 வயசிலும் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் கைவசம் இருக்கும் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
வேட்டையன்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டை திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை த.செ ஞானவேல் இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் வேட்டையன் திரைப்படத்திற்கு அனிருத் திசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் ரித்திகா, துஷாரா விஜயன், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ரக்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இந்த மாதம் பத்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
கூலி:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தங்க கடத்தலை மையமாக வைத்து லோகேஷ் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஜெயிலர் 2:
கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகி மாபெரும் அளவில் ஹிட்டானது. ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூலி படத்தின் ஷூட்டிங் முடித்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய்லர் 2 திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஹுக்கும் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக கர்ணன், மாமன்னன், பரியேறும் பெருமாள், வாழை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம் பெற்ற மாரி செல்வராஜ். இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் 2018 என்ற படத்தை இயக்கிய வெற்றி கண்டவர் சூடு அந்தோணி ஜோசப். இவரிடமும் ரஜினிகாந்த் தற்போது கதை கேட்டு வருவதாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது.