தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் இருந்து இன்று வரை ஒரு தவிர்க்க முடியாத நடிகராக சத்யராஜ் இருந்து வருகின்றார். முதலில் தயாரிப்பு உங்களிடம் பணிகளை செய்து வந்த சத்யராஜ் அதன் பிறகு தான் ஒரு நடிகராக மாறினார். இவரின் பள்ளிக்கால நண்பரான மணிவண்ணனுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்த அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். அது மட்டுமல்லாமல் மணிவண்ணன் இயக்கிய பெரும் படங்களில் சத்யராஜ் நடித்து இவர்களின் காம்பினேஷனில் நிறைய படங்கள் வெற்றியை கண்டுள்ளது. கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் சத்யராஜ் நடித்துள்ளார்.
இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகரும் கூட. மேலும் தந்தை பெரியாராக நடித்த திரைப்படத்தில் ஊதியம் வாங்காமல் சத்யராஜ் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி திரைத்துறையின் மதிப்புமிக்க ஒரு நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை நடிகர் சங்கிலி முருகன் ஒரு பேட்டியில் பகிர்ந்து உள்ளார். அதில், விஜயகாந்த் நடிப்பில் வெளியான கரிமேடு கருவாயன் திரைப்படத்தில் நடிக்க சத்யராஜை அழைத்திருந்தோம். அந்த படத்தில் தயங்காமல் நடித்துக் கொடுத்த சத்யராஜ் அந்த படத்தில் நடிக்க சம்பளமே வாங்கவில்லை.
ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் படத்தை முடித்துக் கொடுத்தார். அந்தப் படத்தில் விஜயகாந்தை தவிர யாரும் சம்பளம் வாங்கவில்லை. சத்யராஜ், கவுண்டமணி மற்றும் செந்தில் என அனைவருமே சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தனர். அது மட்டுமல்லாமல் படப்பிடிப்பு செலவுக்காக செந்தில் தனது நகைகளை அடமானம் வைத்து பணம் கொடுத்து உதவினார் என்று சங்கிலி முருகன் பேட்டியில் கூறியுள்ளார்.