உலகின் 20 சிறந்த சிக்கன் உணவுகள் பட்டியல்…! பட்டர் சிக்கன் எந்த இடத்தை பிடித்தது தெரியுமா…? லிஸ்டில் சிக்கன் பிரியாணி இல்லையே…!!

By Devi Ramu on கார்த்திகை 19, 2025

Spread the love

டேஸ்ட்அட்லஸ் (TasteAtlas) நிறுவனம் வெளியிட்ட ‘உலகின் 20 சிறந்த சிக்கன் உணவுகள்’ என்ற தரவரிசைப் பட்டியலில், வட இந்தியாவின் பிரபலமான உணவான பட்டர் சிக்கன்  5-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் துருக்கியின் தாவுக் டோப்காபி முதலிடத்திலும், மொராக்கோவின் ரிஃபிசா மற்றும் தென் கொரியாவின் சிக்கின் ஆகியவை 2-வது இடத்திலும் உள்ளன. இந்தத் தரவரிசையில், மற்றொரு இந்திய உணவான தந்தூரி சிக்கன் 14-வது இடத்தைப் பெற்றுள்ளது.

வெண்ணெய் கலந்த கிரீமியான குழம்பில் தந்தூரி கோழியின் துண்டுகளைச் சேர்ப்பதன் மூலம் இந்த உணவு மாயாஜாலச் சுவையை உருவாக்குகிறது. வீணாகும் தந்தூரி சிக்கன் துண்டுகளைப் பயன்படுத்துவதற்காக இந்த உணவு முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இந்தச் சுவையான பட்டர் சிக்கனை நாண் உடன் சேர்த்துச் சாப்பிடவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அதே சமயம், இந்தியாவில் பலரின் விருப்ப உணவாக இருக்கும் சிக்கன் பிரியாணி இந்தப் பட்டியலில் இடம்பெறாதது குறித்துப் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர்.